search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ வைத்து எரிப்பு"

    கம்பம் நகராட்சி குப்பைக் கிடங்கு அருகே குப்பைகள், கழிவுகளை தீ வைத்து எரிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
    கம்பம்:

    கம்பம் நகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகள் கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலை யானைகுழாய் அருகே நகராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைக்கிடங்கில் நள்ளிரவு நேரங்களில் மர்மநபர்கள் கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிவிட்டு தீவைத்து எரித்து விடுகின்றனர்.

    இதனால் ஏற்படும் புகை மண்டலத்தால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சுவாசக்கோளாறு ஏற்படுகிறது. இதற்கிடையே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்தெடுப்பதற்காக அங்கு பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக குப்பைக்கிடங்கில் வெளிநபர்கள் நுழையாத வண்ணம் தடுக்க சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாதுகாப்பு பணியில் துப்புரவு பணியாளர்கள் உள்ளதால் தற்போது குப்பைக்கிடங்கில் தீ வைப்பது குறைந்துள்ளது.

    இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக குப்பைக்கிடங்கு அருகில் சாலையோரத்தில் உள்ள தனியார் நிலங்களில் கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள், ஒர்க்‌ஷாப் கழிவுகள், ரெடிமேட் ஆடை கழிவுகள் ஆகியவற்றை கொட்டி தீவைத்து எரித்து விடுகின்றனர்.

    இதனால் அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிப்பது மட்டுமின்றி அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே கழிவுகளை கொட்டி தீ வைக்கும் மர்மநபர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×